ராணுவ கோப்புகளே காணாமல் போனால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? கே.எஸ். அழகிரி கேள்வி


ராணுவ கோப்புகளே காணாமல் போனால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? கே.எஸ். அழகிரி கேள்வி
x
தினத்தந்தி 7 March 2019 11:51 AM GMT (Updated: 2019-03-07T17:21:57+05:30)

பிரதமர் மோடி ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போனால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற 13ந்தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ள பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.  இதுபற்றிய ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, எச். வசந்த குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிற முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போய் உள்ளதாக கூறப்படுகிறது.  இதேநிலை தொடர்ந்தால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story