2019 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ல் தேர்தல் நடக்கிறது
2019 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ல் தேர்தல் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 18-ம் தேதி இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 23-ம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது
ஏப்ரல் 29-ம் தேதி நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது
மே 6-ம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது
மே 12-ம் தேதி ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது
மே 19-ம் தேதி ஏழாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், அரியான, இமாச்சல் பிரதேசம், கேரளா, மேகலாயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், அந்தமான், தாதர் நாகர் காவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு, புதுடெல்லி, புதுச்சேரி, சண்டிகார் ஆகிய 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
புதுச்சேரியிலும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல்: மார்ச் 19
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 26
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 27
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 29
வாக்கு எண்ணிக்கை: மே 23
Related Tags :
Next Story