கோவிலில் தாமரை கோலங்கள் அழிப்பு, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
பா.ஜனதா சின்னமென ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரையப்பட்டிருந்த தாமரை கோலங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ விழாவிற்காக தாமரை வடிவிலான கோலங்கள் சுண்ணாம்பு கலவையால் வரையப்பட்டுள்ளது. இந்த கோலங்கள் தேர்தல் அதிகாரிகளால் கட்சி சின்னமென வெள்ளை சுண்ணாம்பு பூசி மறைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வழக்கப்படி ஆண்டாண்டு காலமாக வரையப்படும் தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம். மஹாலஷ்மி அமர்ந்திருக்கும் தாமரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல.
அப்படியென்றால் கை காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா? இந்துமத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story