பொள்ளாச்சி கொடூரம்: துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த மாணவிகள்


பொள்ளாச்சி கொடூரம்: துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த மாணவிகள்
x
தினத்தந்தி 16 March 2019 12:51 PM IST (Updated: 16 March 2019 12:53 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மாணவிகள் இருவர் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை,

கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் தமிழ் ஈழம். சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். பயின்று வருகிறார். மற்றொரு மகள் ஓவியா துடியலூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர்கள் இருவரும் பெண்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் எனக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர்.

அந்த மனுவில், பொள்ளாச்சி கொடூரத்தால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்திருப்பதாகவும், தங்களது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story