மாநில செய்திகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குபரிகார பூஜைக்கு எடுத்து வந்த 1,008 பித்தளை செம்புகள் பறிமுதல்தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை + "||" + Trichy Srirangam temple 1,008 brass Coppery Confiscated

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குபரிகார பூஜைக்கு எடுத்து வந்த 1,008 பித்தளை செம்புகள் பறிமுதல்தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குபரிகார பூஜைக்கு எடுத்து வந்த 1,008 பித்தளை செம்புகள் பறிமுதல்தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பரிகார பூஜைக்கு எடுத்து வந்த 1,008 பித்தளை செம்புகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
திருச்சி,

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி-கரூர் சாலை குடமுருட்டி பாலம் உள்ள சோதனை சாவடி எண்-7 அருகில் நேற்று காலை திருச்சி பறக்கும் படை அதிகாரிகள், தனி தாசில்தார் மோகனா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த காரில், கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் மனைவி, கார் டிரைவருடன் வந்தார். காரில் 1,008 பித்தளை செம்புகள், 500-க்கும் மேற்பட்ட சங்குகள் மற்றும் பூஜைக்கான பூக்கள் இருந்தது. அதற்கான ஆவணம் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

பரிகார பூஜை

காரில் பித்தளை செம்புகள் மற்றும் சங்குகள் எதற்காக எடுத்து வரப்பட்டது என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்காக செம்புகள் மற்றும் சங்குகளை கோவையில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பெற்று வந்ததாக கூறினர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வேளையில், ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு மேல் உள்ள பொருட்களுக்கு உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும் எனவும், 1,008 செம்புகள், சங்குகள் மற்றும் பூஜைக்காக எடுத்து வந்த பூக்களுக்கு உரிய ஆவணம் ஏதும் இல்லை என்பதால் பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில், டாக்டரின் மனைவியிடம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவற்றை திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். தாசில்தார் அதனை பார்வையிட்டு ‘சீல்’ வைத்தார். பின்னர் அப்பொருட்கள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,911 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,911 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
2. தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட 1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட 1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
3. 1,500 அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை வீட்டு கடன்களுக்கு 5 சதவீத வட்டி தள்ளுபடி
1,500 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். வீட்டு கடன்களுக்கு 5 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
4. கர்நாடகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு
கர்நாடகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் 1,000 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.
5. 1,800 செவிலியர்கள் விரைவில் நியமனம் சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு, பன்றி காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் முழுகட்டுப்பாட்டில் உள்ளது.