நாமக்கல்லில் கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டி


நாமக்கல்லில் கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டி
x
தினத்தந்தி 18 March 2019 2:27 PM IST (Updated: 18 March 2019 2:53 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஈரோட்டில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு பற்றி ஆலோசிக்கப்பட்டது.  இதன் முடிவில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் ஏ.கே.பி. சின்ராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.  வேட்பாளர் சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story