தஞ்சை தொகுதியில் த.மா.கா. வேட்பாளர் நடராஜன் சைக்கிள் சின்னத்தில் போட்டி


தஞ்சை தொகுதியில் த.மா.கா. வேட்பாளர் நடராஜன் சைக்கிள் சின்னத்தில் போட்டி
x
தினத்தந்தி 18 March 2019 2:49 PM IST (Updated: 18 March 2019 3:05 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தொகுதியில் த.மா.கா. வேட்பாளர் நடராஜன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார் என அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்து உள்ளார்.

தஞ்சை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பற்றி அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதன் முடிவில் ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சி தலைவர் ஜி.கே. வாசன், தஞ்சை தொகுதியில் த.மா.கா. வேட்பாளராக நடராஜன் போட்டியிடுகிறார் என தெரிவித்து உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டும் என ஜி.கே. வாசன் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், அக்கட்சிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்து உள்ளார்.

Next Story