பொள்ளாச்சி விவகாரம்: முறையான விசாரணை நடத்தக்கோரி பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு


பொள்ளாச்சி விவகாரம்: முறையான விசாரணை நடத்தக்கோரி பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு
x
தினத்தந்தி 19 March 2019 10:01 AM IST (Updated: 19 March 2019 10:01 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை கடுமையான பிரிவுகளில் தண்டிக்க கோரியும், முறையான விசாரணை நடத்த கோரியும் பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி,

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவம்  தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை கடுமையான பிரிவுகளில் தண்டிக்க கோரியும், முறையான விசாரணை நடத்த கோரியும் பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  6 டி.எஸ்.பி தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story