வாக்குகளை பெற நாடகமாடுகிறது திமுக: முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
வாக்குகளை பெற திமுக நாடகமாடுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர்,
மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, திமுக நாடகமாடுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து விமர்சனம் செய்தார். மேலும், அதிமுக அமைத்துள்ள கூட்டணி கொள்கைப் பிடிப்புடன் உள்ள கூட்டணி என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
Related Tags :
Next Story