திறந்த வேனில் பிரசாரம்; உதயநிதியின் வியர்வையை துண்டால் துடைத்தப்படி நின்ற வேட்பாளர்


திறந்த வேனில் பிரசாரம்; உதயநிதியின் வியர்வையை துண்டால் துடைத்தப்படி நின்ற வேட்பாளர்
x
தினத்தந்தி 23 March 2019 1:55 PM GMT (Updated: 2019-03-23T19:25:18+05:30)

திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினின் வியர்வையை அருகில் இருந்த வேட்பாளர் துண்டால் துடைத்தப்படி நின்றார்.

சேலம்,

தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகன் மற்றும் திரைப்பட நடிகரான உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி, பொன்முடியின் மகனான தி.மு.க. வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அதன்பின் அவர், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூரில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

இதில், வெயிலில் நின்றபடி தொண்டர்கள் முன் பேசிய உதயநிதிக்கு உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது.  அப்போது உதயநிதி ஸ்டாலினின் வியர்வையை அருகில் நின்றிருந்த வேட்பாளர் கவுதம சிகாமணி தனது துண்டால் துடைத்தபடி இருந்தார்.

Next Story