ஆர்.கே.நகர்...முதல் வேலூர் வரை கட்டு கட்டாக பணம் .... சப்பாத்திக்குள் ரூ. 2 ஆயிரம் வாக்காளரை கவரும் நூதன வழிகள்
தேர்தல் அதிகாரிகள் எவ்வளவு விழிப்புடன் இருந்தலும் அரசியல்வாதிகள் புதிய புதிய வழிகளை கண்டுபிடித்து பணத்தை வினியோகம் செய்து வருகின்றனர்.
17-வது மக்களவைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. 1,866 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலில் தான் கணக்கில்வராத பணம், கணக்கில் வந்த பணம், கருப்பு பணம், சட்டத்திற்கு உட்பட்ட பணம், சட்டவிரோதமான பணம் என பணம் வாரி இறைக்கப்படும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 35 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஊடக ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தேர்தலுக்கு உத்தியோகபூர்வ மதிப்பீடு ரூ.7,000-8,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், மீதமுள்ள 27,000 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும் என இந்த ஆராய்ச்சி மையம் மதிப்பிட்டு உள்ளது.
2014-ஆம் ஆண்டு தேர்தலில் 533 பெரிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சிறிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு ரூ.54 லட்சமும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தின் படி சராசரியாக ஒரு வேட்பாளர் ரூ.25 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கூறி உள்ளார். ஆணையம் குறிப்பிட்ட தொகையை விட இது குறைவாக உள்ளது. 2014 தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவினம், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தொகுப்பில் 58 சதவீதமாக இருந்தது.
அறிவிக்கப்பட்ட தொகையை விட 10 எம்.பி.க்கள் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர். பாரதீய ஜனதாவில் 4 எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசில் 2 எம்பிக்களும், காங்கிரஸ், இந்திய தேசியவாத காங்கிரஸ், யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக ஆகிய கட்சிகளில் தலா ஒரு எம்.பி.யும் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.
20 அல்லது அதற்கு மேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் கேரளாவின் சராசரி தேர்தல் செலவினங்கள் ரூ.52,09,040, ராஜஸ்தான் ரூ. 47,89,702, மகாராஷ்டிரா ரூ. 46,93,421, குஜராத் ரூ. 45,91,757, மேற்கு வங்கம் ரூ. 44,05,462.
அசாம் கலியாபூர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் எம்.பியாக தேர்வான கவுராவ் கோகாய் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் ரூ.70,00,000 வரம்பை மீறிய ஒரே எம்.பி. ஆவார். கோகாய் ரூ.82,40,641, செலவு செய்து உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார்.
ஆய்வு கருத்துப்படி, ஒரு சட்டமன்ற வேட்பாளருக்கு ரூ. 1-2 கோடியும் மற்றும் லோக்சபா தேர்தலில் வேட்பாளருக்கு 6-7 கோடி ரூபாய் வெற்றி பெறும் வாய்ப்பை வலுப்படுத்தும் நோக்கில் செலவிட வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.
ஒரு ஆய்வில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விளம்பரங்களுக்கு 26 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என கூறியுள்ளது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் விளம்பரங்களுக்கு செலவிட்ட (12 பில்லியன் ரூபாய்) தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் செலவுகள் குறித்து சென்டர் ஃபார் மீடியா ஸ்டெடீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வரும் 2019 தேர்தலுக்கு 7 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 4,87,86,50,00,000.00) செலவாகும் என்று கணித்துள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலுக்கு செலவான 6.5 பில்லியன் டாலரை விட அதிகமானது என்று தெரிவித்துள்ளது. மேலும் 2019 தேர்தலின் செலவு 2014 நாடாளுமன்றத் தேர்தலின் செலவைவிட 40% அதிகமானது என்கிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 5 பில்லியன் டாலர் செலவானது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த ஆய்வில் சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் செலவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக வலைத்தளங்களில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 50 பில்லியன் டாலர் செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமூக வலைத்தளங்களில் 2.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டது. மேலும் ஸேனித் இந்தியா நடத்திய ஆய்வில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விளம்பரங்களுக்கு 26 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் எனக் கூறியுள்ளது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் விளம்பரங்களுக்கு செலவிட்ட (12 பில்லியன் ரூபாய்) தொகையைவிடஇரண்டு மடங்கு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள ஆய்வுகளை வைத்து பார்க்கும் போது வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்தான் உலக அளவில் நடைபெறும் தேர்தலில் அதிக செலவுடன் நடைபெறவிருக்கும் தேர்தல் எனத் தெரியவந்துள்ளது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி அரசியல் தலைவர்களும் பணம் வாங்குவது பற்றி வாக்காளர்களும் நினைத்துக்கூட
பார்க்காத காலமும் இருந்தது. ஆனால் இன்று காலம் மாறிப்போச்சு. பணம் வாங்குவதை யாரும் தவறாக நினைப்பது இல்லை அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், கார்பரேட் நிறுவனங்கள் மீது கோடி கோடியாய் ஊழல் குற்றசாட்டுகள் எழுவதால்
மக்கள் தாங்கள் வங்கும் சில ஆயிரம் ரூபாய் ஊழல் அல்லது குற்றமாக கருதும் மன நிலை இல்லை.
பொது மக்களும் தப்பு செய்பவர்களை காரணம்காட்டி யாருதான் ஒழுங்கு என் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இளைஞர்கள்,, நடுநிலை யாளர்கள் மத்தியில் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்கிற விழிப் புணர்வு இருந்தாலும், அனைத்து தரப்பினரையும், இன்னும் அந்த விழிப்புணர்வு முழுமையாக சென்றடையவில்லை என்றே கூறவேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தொடங்கியதாக் கூறப்பட்டாலும் அதற்கு முன்னதாகவே இந்த கலாச்சாரம் இலைமறறை காயாக இருந்து உள்ளது. திருமங்கலம் பார்முலா என அதற்கு பிறகுதான் பேசபட்டது. தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் 20 வது ரூபாய் நோட்டு பார்முலா, அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்கள் நிறுத்தம் என பரவியது.
மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டு வருகின்றன. தனியார் கார், பஸ், அரசுப் பேருந்துகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பறக்கும் படைகள் மூலம் ரூ.600 கோடி மதிப்பிலான பணம், மது, இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பாராளுமன்ற தேர்தலை யொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நடத்திவரும் நிலையில் வேலூரில்
வருமான வரி துறையினர் திடீரென தி.மு.க. பொருளாளர் துரை முருகன் வீட்டில் சோதனை நடத்தினர். வேலூர் தொகுதியில் துரை
முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனை முதலில் சாதாரணமாகவே பார்க்கப் பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் நேற்று திடீரென புதிய பூதம் பண உருவில் கிளம்பியது. காட்பாடியில் சிமெண்டு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது. இதுதொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது. இந்த சோதனையில் கோடி கோடியாய் பணம் பிடிபட்டதாக கூறப்படுகிறது.
இதில் தமிழகத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தொகை ரூ.71 கோடி.
தேர்தல் அதிகாரிகள் எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும் அரசியல்வாதிகள் புதிய புதிய வழிகளை கண்டு பிடித்து பணத்தை வினியோகம் செய்து வருகின்றனர்
இந்நிலையில் பண விநியோகம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரூபா ஐபிஎஸ், வாக்காளர்களைக் கவரப் பயன்படுத்தும் நூதன வழிகள் இவை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்கவும் என்று பதிவிட்டுள்ளார். அதுதொடர்பான வீடியோவையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.
Ingenious ways of luring voters...
— D Roopa IPS (@D_Roopa_IPS) April 1, 2019
Concerned authorities may kindly take note. pic.twitter.com/iiJtQe1JjG
Related Tags :
Next Story