திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி - ஸ்டாலின் பேச்சு


திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி - ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 8:58 PM IST (Updated: 4 April 2019 8:58 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் மக்களுடன் இருப்பது திமுக. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும். மக்களின் போராட்டங்களை காவல்துறை கொண்டு அடக்க நினைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.  நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

வேலை இழந்துள்ள மக்கள் நல பணியாளர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் வேலை வழங்கப்படும்.  நீட் தேர்வு விலக்கு பற்றி அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story