கடலிலும், சாலையிலும் தாமரை மலரும்; தமிழிசை சவுந்தரராஜன்
கடலிலும், சாலையிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஆளும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சியின் தமிழக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார்.
தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அதில், கடலிலும், சாலையிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் தாமரை மலரும் என கூறினார்.
தி.மு.க.வால் முடியாதது என்னால் முடியும். உப்பு நீர் இங்குள்ள மக்களின் உயிர் நீராக உள்ளது. அந்த உயிர் நீரில் தாமரை நிச்சயமாக மலரும் என அவர் கூறினார்.
தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிமொழிக்கு தான் தூத்துக்குடி புதிய இடம் என்றும் தாம் இந்த மண்ணின் மகள் என்றும் கூறினார்.
Related Tags :
Next Story