திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு
திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சாய ஆலை கழிவு தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
Related Tags :
Next Story