ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்
ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை தேர்தல் நடக்கும் நிலையில் அதிரடி சோதனைகள் தொடர்கிறது. தேர்தல் பறக்கும்படையும் தீவிரமாக கண்காணிப்பை மேற்கொள்கிறது. இந்நிலையில் ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 25 கிலோ எடை அளவில் மூட்டைகளாக தங்கம் வேனில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகிறது என வேனில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story