தேர்தல் ரத்து; வேலூரில் நாளை 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து செய்யப்படுகிறது
வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை 4 இடங்களில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அன்றைய தேதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பணம் பறிமுதல் காரணமாக வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டது. இருப்பினும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 4 இடங்களில் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், வாணியம்பாடி பகுதிகளில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.
Related Tags :
Next Story