வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்


வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
x
தினத்தந்தி 18 April 2019 10:35 AM GMT (Updated: 2019-04-18T16:05:13+05:30)

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டமிட்டுள்ளது என தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.

மாலை 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டமிட்டுள்ளது என தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.  ஆளுங்கட்சிக்கு உதவும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலிருந்து திரும்ப பெறலாம். பிற்பகல் 3 மணிக்கு மேல் அதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டு போட உள்ளனர். சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்ய உள்ளனர், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கேட்டுக் கொண்டுள்ளது.

Next Story