தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நிலைத்து நிற்கும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நிலைத்து நிற்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் 5 நாள் தேர்தல் பிரசாரம் செய்ய செல்கிறேன். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள 4 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். பா.ஜ.க. - அ.தி. மு.க. கூட்டணி வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. இதனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த கவலையில் உள்ளார்.
மத்தியில் தாமரை மலரும். தமிழகத்தில் அ.தி. மு.க. ஆட்சி நிலைத்து இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆங்கிலத்தில் எழுதும் சிலருக்கு மட்டும் அவர்கள் விருப்பப்படி வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மாநில உணர்வுடன் கூடிய தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். தேசியத்தில் எந்தவித பிரிவினையும் ஏற்பட்டு விடக்கூடாது. தமிழர் களுக்கு அனைத்து அங்கீகாரமும் கிடைக்க வேண்டும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
பானி புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தவுடன், தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ததை அரசியல் செய்வதாக காங்கிரசார் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் புயல் வந்தபோது மன்மோகன்சிங் எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தார்?. எனவே புயல் குறித்து பேச தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எந்த தகுதியும் இல்லை.
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக உலக வங்கி கூறியுள்ளது. ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு அதிகமான நிதி கிடைத்துள்ளது. ஆனால் தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது. இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story