திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம் : செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு
திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம் மேற்கொண்டு செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
கரூர்,
அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். பள்ளப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.
அதனைத் தொடர்ந்து சந்தைப்பேட்டையில் கடைகடையாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் உடன் சென்று வாக்குச் சேகரித்தனர்.
Related Tags :
Next Story