பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்


பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்
x
தினத்தந்தி 14 May 2019 1:32 PM IST (Updated: 14 May 2019 1:32 PM IST)
t-max-icont-min-icon

பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:- “ பதவி பசி காரணமாக பாஜகவுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசி வருகிறார். 

ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார். பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பாஜக வெற்றி பெறும் என்பது தெரிந்துதான் எங்களிடம் பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தப்படுவது வாடிக்கைதான்” என்றார். 

பாஜகவிடம் 5 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்டு திமுக பேசி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது தமிழிசை சௌந்தரராஜன் மேற்கண்ட பதிலை அளித்தார் .

Next Story