ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: 1 மணி நேரம் வாக்கு இயந்திரம் பழுது, சரிபார்க்கப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப்பதிவு


ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: 1 மணி நேரம் வாக்கு இயந்திரம் பழுது, சரிபார்க்கப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 May 2019 5:30 AM GMT (Updated: 19 May 2019 5:30 AM GMT)

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டநத்தம் பகுதி வாக்குசாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

ஒட்டப்பிடாரம்,

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 257 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டநத்தம் பகுதி வாக்குசாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. 

ஒட்டநத்தம் பகுதி வாக்குசாவடியில் பழுதான வாக்கு இயந்திரம் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதேபோல் சூலூர் தொகுதியில் எலச்சிபாளையம் 37-வது வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் பழுதானதால் 30 நிமிடங்களுக்கு மேல் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story