அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு


அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 19 May 2019 6:31 AM GMT (Updated: 2019-05-19T12:01:59+05:30)

அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அமைதியான, நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் எண்ணம். 556 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா வசதிகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் 11 மணி நிலவரப்படி இதுவரை 32.22% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பண்ருட்டியில் 27% வாக்குகள் பதிவாகி உள்ளது.

4 சட்டசபை தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி,  சூலூர் - 31.55%, அரவக்குறிச்சி - 34.89%, திருப்பரங்குன்றம் - 30.02%, ஒட்டப்பிடாரம் - 30.28% வாக்குகள் பதிவாகி உள்ளது. 

Next Story