‘தனது ஆதாயத்துக்காக சாதி அரசியல்’ “காந்தியை மதவாதி என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?” திருமாவளவன் மீது தமிழிசை பாய்ச்சல்
“காந்தியை மதவாதி என்று சொல்ல திருமாவளவனுக்கு என்ன அருகதை உள்ளது?” என்று தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருமாவளவனின் சுயரூபமும், மன நிலையும் வெளிப்பட்டு விட்டது. சனாதன தர்மம் எதிர்ப்பு என்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் தேர்தல் வந்ததும் சிதம்பரத்தில் தேர்தல் பக்தி பரவச வேடத்தில் சிவாச்சாரியர்களிடம் மண்டியிட்டு ஆசி வாங்கினார். நடிப்பில் கமல்ஹாசனையும் மிஞ்சிவிட்டார்.
காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று ஆவேசப்பட்ட அவர், 3 ஆண்டுகளில் எல்லாவற்றையும் மறந்து காங்கிரசோடு கூட்டணி அமைத்து ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே என் முதல் வேலை என்கிறார். ராஜபக்சேவின் கைகளினாலேயே பரிசும் வாங்கி வந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று தன்னை கூறிக்கொண்டு, முழுக்க முழுக்க தனது ஆதாயத்துக்காக சாதியை வைத்து அரசியல் நடத்துகிறார். இப்போது காந்திகூட அவரது கண்களுக்கு தீவிரவாதி ஆகிவிட்டார். கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் காந்தியை ஒரு இந்து தீவிரவாதி என்று மிகவும் மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறார்.
திருமாவளவன் தான் ஒரு பிரிவினைவாதி என்பதை அடையாளப்படுத்தி இருக்கிறார். இப்படியே பிரிவினை உணர்வுகளுடன் பேசியே குளிர்காய நினைக்கிறார். ஆனால் மக்கள் அவ்வளவு எளிதில் அவரது வலையில் சிக்க மாட்டார்கள். சாதியவாதிகளுக்கு அடுத்தவரை மதவாதி என்று சொல்ல என்ன அருகதை உள்ளது? மோடி எதிர்ப்பை மட்டுமே விதைத்துவரும் உங்களுக்கு தேர்தல் முடிவுகள் தக்க பாடம் கற்பிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story