சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்குஎண்ணும் மையத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு


சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்குஎண்ணும் மையத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு
x
தினத்தந்தி 22 May 2019 5:23 AM GMT (Updated: 2019-05-22T11:01:55+05:30)

சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்குஎண்ணும் மையத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சென்னையை பொறுத்தமட்டில் வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதுதவிர பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்குஎண்ணும் மையத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.சென்னையில்   வாக்கு எண்ணும் 3 மையங்களில்  5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் கூறினார்.

Next Story