கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் -எல்.கே.சுதீஷ்


கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் -எல்.கே.சுதீஷ்
x
தினத்தந்தி 22 May 2019 6:39 AM GMT (Updated: 2019-05-22T12:09:56+05:30)

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை

கூட்டணிக் கட்சியினருக்கு பாஜக தலைவர் அமித்ஷா டெல்லியில் விருந்து அளித்தார். அதில் கலந்து கொண்டு விட்டு தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ்  இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எல்.கே.சுதீஷ்  கூறியதாவது:-

கடந்த முறை தேர்தலின் போது அதிமுக தோல்வி அடையும் என வெளியான கருத்து கணிப்புகள் பொய்யானது போலவே, இந்த முறையும் கருத்து கணிப்புகள் பொய்யாகி அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மத்திய அமைச்சரவையில்  தேமுதிக இடம்பெறுமா என்பது தேர்தல் முடிவு வெளியான பின்னரே தீர்மானிக்கப்படும். கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்வர் என கூறினார்.

Next Story