மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ + "||" + Counting of votes Will be released soon Tamil Nadu Chief Electoral Officer Satyabrata Sahoo

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.
சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

8 மணிக்கே தபால் வாக்குகளுடன் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும் பணி தொடங்கும். மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்ட பின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 19 கம்பெனி  துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 17 ஆயிரத்திற்கும்  அதிகமானோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்கு  எண்ணும் பணியில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்படுவார்கள். 1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். வெப் காமிரா மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும்  வாக்குகள் எண்ணப்படும். ஒரு சுற்று முடிய 30 நிமிடமாகும் என கூறினார்.