முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 3 Jun 2019 7:54 AM IST (Updated: 3 Jun 2019 7:54 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

முன்னாள் முதல்வர், மறைந்த கருணாநிதியின் 96-ஆவது பிறந்த நாளையொட்டி  (ஜூன் 3) அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில்  திமுக முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கவிஞர் வைரமுத்து   உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. 

பின்னர், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 5 மணிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

Next Story