தூத்துக்குடி விளாத்திகுளத்தில் அரசு பேருந்து மீது கார் மோதியது; 3 பேர் பலி


தூத்துக்குடி விளாத்திகுளத்தில் அரசு பேருந்து மீது கார் மோதியது; 3 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jun 2019 3:41 PM IST (Updated: 4 Jun 2019 3:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விளாத்திகுளம் பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் விளாத்திகுளம் பகுதியில் அரசு பேருந்து ஒன்று நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது.  இந்நிலையில், அந்த வழியே சென்ற கார் ஒன்று திடீரென பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.  அவர்களில் வங்கி மேலாளரும் ஒருவர் ஆவார்.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தொடர்ந்து இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story