காயிதே மில்லத் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மரியாதை
காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
சென்னை,
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா பெரிய மசூதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளனர்.
விழாவில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து பிரிவு அணியினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story