எடப்பாடி பழனிசாமிக்கு பல் வலி நிகழ்ச்சிகள் ரத்து
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல் வலி மற்றும் அது சம்பந்தமான சிகிச்சைகளை பல் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி ஆஸ்பத்திரியில் மேற்கொண்டார்.
சென்னை,
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல் வலி மற்றும் அது சம்பந்தமான சிகிச்சைகளை பல் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி ஆஸ்பத்திரியில் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
பல் சிகிச்சையால் அவர் பேச முடியாத நிலையில் இருப்பதால், வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
எனவே தான் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த பள்ளி மாணவ–மாணவிகளுக்கு புதிய பாடநூல் வழங்கும் விழா, அ.தி.மு.க. சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, காயிதே மில்லத் பிறந்தநாள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி போன்றவற்றில் அவர் கலந்துகொள்ளவில்லை.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் ஒரு சில தினங்கள் ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story