24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை


24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை
x
தினத்தந்தி 6 Jun 2019 3:01 PM IST (Updated: 6 Jun 2019 3:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்

 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம்.  அதே நேரத்தில் ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்ற கூடாது.

பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அதற்கு எழுத்துப்பூர்வ அனுமதியை அவர்களிடம் நிறுவனங்கள் பெற வேண்டும். இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த புதிய நடைமுறை அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story