நீட் தேர்வை தாமதமின்றி ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
நீட் தேர்வை தாமதமின்றி ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்த்து ஏற்றத்தாழ்வை வளர்க்கும் நீட் தேர்வை தாமதமின்றி மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு சமூக நீதியை சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது. நீட் தேர்வு மேலும் தாமதமின்றி ரத்து செய்யப்பட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவும் திமுக பாடுபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story