தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக அரசை குற்றம் சாட்டி புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பேசியது குறித்து மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின், தமிழக மக்களை கேவலப்படுத்தும் வகையில் ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்தது கண்டனத்திற்குரியது. கிரண்பேடியின் கருத்தை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார்.
Related Tags :
Next Story