தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது நகராட்சி நிர்வாகத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஜூன்) 28-ந் தேதி ஆரம்பமான நிலையில், இம்மாதம் 1-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இதுவரை 13 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில், இன்று (திங்கட்கிழமை) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்க துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியவுடன் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
கேள்வி நேரம் முடிந்ததும், மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்து பேசுகிறார். இறுதியாக, தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சட்டமன்ற கூட்டம் காலை, மாலை ஆகிய இருவேளையிலும் நடைபெற இருக்கிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கிறார்.
மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பதில் அளிக்கிறார்.

Related Tags :
Next Story