மாநிலங்களவை தேர்தலில் போட்டி அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் வைகோ மனுவை ஏற்பதில் சிக்கல் வருமா?
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் இன்று (திங்கட்கிழமை) மனுதாக்கல் செய்யும் நிலையில், வைகோ மனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில், 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். இந்த 2 கட்சிகளும், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிக்கு தலா ஒரு இடத்தை வழங்கியுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் தலா 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
அ.தி.மு.க. சார்பில் கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் முகமது ஜானும், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. சார்பில் தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகமும், வக்கீல் வில்சனும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர்களும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரான வைகோவும் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களும் மற்றும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசும் வேட்புமனு தாக்கல் இறுதிநாளான இன்று (திங்கட்கிழமை) மனுதாக்கல் செய்கிறார்கள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டசபை செயலாளருமான சீனிவாசன் அறையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன், பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.
மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மனுதாக்கல் செய்து இருப்பதால் அவர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். என்றாலும், தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இது தொடர்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கருத்து கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இந்திய தேர்தல் கமிஷனிடம் கடிதம் மூலம் விளக்கம் கேட்டுள்ளார். தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட முடியுமா? என்று கருத்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே கருத்து தெரிவித்த வைகோ, “வழக்கு ஒன்றில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை தீர்ப்பு, நான் மாநிலங்களவைக்கு செல்வதில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது 9-ந் தேதி (அதாவது நாளை) நடைபெறும் வேட்புமனு பரிசீலனையின் போதுதான் தெரியும்” என்று கூறியிருந்தார்.
எனவே, மாநிலங்களவைக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியான நிலையில், வைகோ மனு ஏற்கப்படுமா? என்பது நாளை வேட்புமனு பரிசீலனையின் போது தெரியவரும். அதற்கு முன்னதாக தேர்தல் கமிஷன் தனது பதிலை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story