மருத்துவ சேர்க்கையின் போது போலி சான்றிதழ் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவ சேர்க்கையின் போது போலி சான்றிதழ் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
மருத்துவ தரவரிசைப்பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்ற புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இருப்பிட சான்றிதழ் போலியாக இருந்ததால் 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு செய்யப்பட்டது. மருத்துவ படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கண்கொத்திப் பாம்பாக நடைபெற்று வருகிறது. இருப்பிடச் சான்றிதழ் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. மருத்துவ சேர்க்கையின் போது போலி சான்றிதழ் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story