அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்- அமைச்சர் ஜெயக்குமார்


அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 11 July 2019 11:53 AM IST (Updated: 11 July 2019 11:53 AM IST)
t-max-icont-min-icon

அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீரர் அழகு முத்துக்கோன் 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களை எதிர்த்து கடுமையாக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்.

அவரது 262வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

அதிமுகவுக்கு ஏற்பட்டதைப்போல், இந்திய அணிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிப்பதில் பாரபட்சம் காட்டவில்லை என கூறினார்.

Next Story