தமிழகத்தில் 105 டி.எஸ்.பி.க்கள் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம்; டி.ஜி.பி. உத்தரவு
தமிழகத்தில் 105 டி.எஸ்.பி.க்கள் மற்றும் காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
தமிழக காவல்துறையின் தலைவராக (சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.) கடந்த ஜூன் 30ந்தேதி ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்று கொண்டார்.
முதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியை தொடங்கிய இவர், அதன்பிறகு தமிழகத்தின் 9 மாவட்டங்களில் சூப்பிரண்டாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
சென்னை போலீஸ் கமிஷனராக 2 முறை பணியாற்றி உள்ளார். அதன்பிறகு சிறைத்துறையிலும் கூடுதல் டி.ஜி.பி.யாக பணிபுரிந்து இருக்கிறார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாகவும் பதவி வகித்து உள்ளார்.
டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் பதவி வகித்து வந்த அவர் தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக பதவியேற்றார். இவர் பதவியேற்ற பின் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்திய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் 105 டி.எஸ்.பி.க்கள் மற்றும் காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story