வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து 16 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை


வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து 16 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 8 Aug 2019 11:27 AM IST (Updated: 8 Aug 2019 11:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை

தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதலாம் நாளான இன்று 16 மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். . இந்த ஆலோசனை கூட்டத்தில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். மேலும்,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், தலைமை செயலளர் சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

கூட்டத்தில், மாவட்டங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், அரசால் செயல்படுத்தப்படும் குடிமராமத்து பணிகள் போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, மழை நீரை சேகரித்து வளமான பூமியாக தமிழ்நாடு தொடர்ந்திட ஆதரவு அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தார். 

2-வது நாளான நாளை வெள்ளிக்கிழமை 12 ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதால், வேலூர் மாவட்ட ஆட்சியர் மட்டும் பங்கேற்கவில்லை.

Next Story