விநாயகர் சதுர்த்தி பண்டிகை: ஈபிஎஸ் - ஓபிஎஸ் வாழ்த்து
தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை,
இந்துக்களால் நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. விநாயகர் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால், நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகப் பெருமானின் அவதார நாளில், வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்” என தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று நோய் நொடியின்றி வாழ வாழ்த்தியுள்ளார்.
Related Tags :
Next Story