இணையதளம் மூலம் செய்யப்படும் திருத்தங்களை வரைவு வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து கொள்ளலாம் - சத்யபிரத சாகு தகவல்


இணையதளம் மூலம் செய்யப்படும் திருத்தங்களை வரைவு வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து கொள்ளலாம் - சத்யபிரத சாகு தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2019 2:07 AM IST (Updated: 7 Sept 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் மற்றும் விவரங்களை வாக்காளர்களே திருத்திக் கொள்வதற்கான புதிய செயலி 1-ந்தேதியில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் மற்றும் விவரங்களை வாக்காளர்களே திருத்திக் கொள்வதற்கான புதிய செயலி 1-ந்தேதியில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. என்.வி.எஸ்.பி. இணையதளத்தில் இருந்து ‘ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன்’ என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதற்குள் செல்லும்போது, செல்போன் எண் உள்பட அது கேட்கும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெயர் விவரங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஆதாரமாக உள்ள இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இப்படி பதிவேற்றம் செய்யப்பட்டதும், அது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலரின் லாக்-இன்-க்கு அந்தத் தகவல்கள் சென்றுவிடும். அதை அவர் பட்டியலிட்டு திருத்தம் கோரும் வாக்காளரின் வீட்டுக்கு வந்து, அவர் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் போன்ற தகவல்களை சரிபார்ப்பார்.

அனைத்தும் சரியாக உள்ள பட்சத்தில், வாக்காளர் கோரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அக்டோபர் 15-ந்தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் அந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை வாக்காளர் சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story