தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதி அரசாணை வெளியீடு


தமிழகம் முழுவதும்  71 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதி அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 9 Sep 2019 11:30 PM GMT (Updated: 9 Sep 2019 10:55 PM GMT)

தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான முதல் மரக்கன்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காமராஜர் சாலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலை அருகில் நட்டு வைத்து இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள், அரசு இடங்கள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் மரங்களை நட்டு சுற்றுச்சூழலை சமபன்படுத்தி பசுமையை காக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 64 லட்சம் மரக்கன்றுகளும், வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும் நட்டு அதனை பராமரிப்பதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதை ஏற்று ரூ198.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story