நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்க பயோ மெட்ரிக் மூலம் சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் விஜயபாஸ்கர்


நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்க பயோ மெட்ரிக் மூலம் சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 1 Oct 2019 8:37 PM IST (Updated: 1 Oct 2019 8:37 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்க பயோ மெட்ரிக் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித்சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்ந்த புகார் வெளிவந்ததை அடுத்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகிய இருவரையும் சிபிசிஐடி தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் பல இடங்களில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.  மேலும் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய நபர்களை சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து பரப்பரப்பினை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தற்போது, இதுதொடர்பாக டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். அதில்  நீட் ஆள்மாறாட்டத்தை தடுக்க பயோமெட்ரிக் கருவிகள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தேசிய தேர்வுகள் முகமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக வருகிற 9ஆம் தேதி ஆலோசிக்கப்பட உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.




Next Story