நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலப்பத்திரப்பதிவை செய்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திமுக தலைவர் கலைஞர் நினைவு அருங்காட்சியகம் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அடுத்த ஆண்டு திறக்கப்படும். கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு நாளுக்கு முன்பு அருங்காட்சியகம் தயாராகிவிடும்.
வெளிமாநில தரகர்களுக்கும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் தொடர்பு இருப்பதால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். நீட் தேர்வை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story