வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 4 Oct 2019 2:39 PM IST (Updated: 4 Oct 2019 2:39 PM IST)
t-max-icont-min-icon

வெப்பச்சலனம் காரணமாக வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெப்ப சலனம் காரணமாக  வடக்கு உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஆயக்குடியில் 3 செ.மீ. நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார்,தென்காசி, வால்பாறை, ஈரோடு மாவட்டம் பவானியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story