நிர்வாகிகளுடன் ஜெயக்குமார் சந்திப்பு: இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்குபா.ஜனதா ஆதரவு பிரசாரத்தில் ஈடுபடவும் முடிவு
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு அளித்துள்ளது. பிரசாரத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளது.
சென்னை,
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மூத்த தலைவர் இல.கணேசன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சுப நாகராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் மாநில வணிகப் பிரிவு தலைவர் ராஜாக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. முழு ஆதரவு தரும் என்று உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து வெளியே வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார், “நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டணி தொடரும்” என்றார்.
பின்னர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த கூட்டணி அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் ஏற்கனவே பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் பேசியுள்ளனர்.
முறைப்படி ஆதரவு கேட்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்தார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறும். அந்தந்த பகுதி பா.ஜ.க. தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்வது குறித்து அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story