குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - வெங்கையா நாயுடு


குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 5 Nov 2019 7:32 PM IST (Updated: 5 Nov 2019 7:32 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை,

2 நாள் பயணமாக  சென்னை வந்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:- 

தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது, தமிழர் என்பது பெருமை, இந்தியராகவும் பெருமை கொள்ளுங்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மொழி, கலாசாரம் ஆகியவற்றை மறந்து விடாதீர்கள், அதே நேரம் மற்றவர்களின் நம்பிக்கையுடன் சண்டையிடாதீர்கள். 

வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தாலும் இந்தியராக ஒன்றிணைவோம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Next Story