ராஜ ராஜ சோழனின் 1034வது சதயவிழா: 2வது நாள் நிகழ்வுகள் கோலாகலம்


ராஜ ராஜ சோழனின் 1034வது சதயவிழா:  2வது நாள் நிகழ்வுகள் கோலாகலம்
x
தினத்தந்தி 6 Nov 2019 1:52 PM IST (Updated: 6 Nov 2019 1:52 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ராஜ ராஜ சோழனின் 1034வது சதயவிழாவின் முக்கிய நிகழ்வான யானை மீது திருமுறை வீதி உலா இன்று நடைபெற்றது.

தஞ்சை,

தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டி எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதயவிழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  இதனை முன்னிட்டு தஞ்சையில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சையில் ராஜ ராஜ சோழனின் 1034வது சதயவிழாவின் 2ம் நாளான இன்று, ராஜ ராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் ஆட்சியர் அண்ணாதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, சதயவிழாவின் முக்கிய நிகழ்வான யானை மீது திருமுறை வீதி உலா வந்தது. தெற்கு, வடக்கு உள்ளிட்ட நான்கு ராஜவீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. இதில் பங்கேற்ற சிவனடியார்கள், பக்தர்கள் தேவாரம் பாடல் பாடியபடி சென்றனர். இசை கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள்,  ராஜராஜ சோழன் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற உள்ளன.

Next Story