முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதால், சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
Related Tags :
Next Story