திருவள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கும் பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள்- நடிகர் ரஜினிகாந்த்


திருவள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கும் பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள்- நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 8 Nov 2019 11:52 AM IST (Updated: 8 Nov 2019 11:52 AM IST)
t-max-icont-min-icon

எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது அது நடக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தம்மை பாரதீய ஜனதா உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்கிறது.   பாரதீய ஜனதா எனக்கு எந்த அழைப்பையும் விடுக்கவில்லை. எனக்கும் , திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இருவருமே மாட்டமாட்டோம். 

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை.திருவள்ளுவர் போன்ற ஞானிகள், மதம் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது.  மத்திய அரசு விருது அளிப்பதற்கு நன்றி” இவ்வாறு அவர் பேசினார்.

Next Story